தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு கவர்னர் ஆர்.வி. அர்லேகர் பதவியேற்பு: அன்புமணி வாழ்த்து

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு கவர்னராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ள இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிகார், கேரளம், இமாலயப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கவர்னராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தமிழக மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்றார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link