மும்பை,
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சஞ்சு சாம்சன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை பல வீரர்கள் அசத்தினர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஒரு நாள் ஆட்டம் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி கிரிக்கெட்டை வேறு நிலைக்கு எடுத்து சென்றுள்ளதாக நான் கருதுகிறேன். ரசிகர்களுக்கு இது சிறந்த பரிசாகும். ஏனென்றால் அவர்கள் இந்த விளையாட்டின் மீது காட்டும் அன்பும், ஆர்வமும்தான் இதற்கு காரணம். என தெரிவித்தார்.
