வரலாற்றில் முதல்முறையாக.. தலைமை தேர்தல் கமிஷனரை நீக்க கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்

புதுடெல்லி,

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கான நோட்டீசில் 130 மக்களவை எம்.பி.க்களும், சுமார் 70 மாநிலங்களவை எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அந்த நோட்டீஸ், மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாரபட்சமான செயல்பாடு, தேர்தல் மோசடி விசாரணையை தடுத்தது. ஏராளமான வாக்காளர்கள் நீக்கம் உள்பட 7 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

‘இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளன. ஆம் ஆத்மி எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனரை நீக்க நோட்டீஸ் கொடுக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். சபையின் மொத்த உறுப்பினர்களில் சிறப்பு பெரும்பான்மை அல்லது சபையில் ஆஜராகி வாக்களித்தவர்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான், பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும்.

Source link