சீரமைப்பு பணி: ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி

சேலம்,

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் மலைப்பாதையில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, ஏற்காடு மலைப்பாதையின் முக்கிய பகுதியான 9-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த பணிகள் மிக மந்தமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் மலை ஏறும் மற்றும் இறங்கும் வாகனங்கள் நீண்ட நேரம் காத் திருக்க வேண்டி உள்ளது. இதனால் பயண நேரம் இருமடங்காக அதிக ரித்துள்ளது. வார இறுதி நாட்களில் வெளியூர் பயணிகள் பல மணி நேரம் மலைப்பாதையிலேயே சிக்கிக்கொள்ளும் சூழல் நிலவுகிறது.

காய்கறிகள் மற்றும் பால் உள்பட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவ ரும் வாகனங்கள் தாமதமாவதால் உள்ளூர் வியாபாரிகளும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

மலைப்பாதை என்பது மிகவும் குறுகலானது. 9-வது வளைவு போன்ற ஆபத்தான பகுதியில் பணிகளைத் தாமதப்படுத்துவது விபத்துகளுக்கு வழிவகுக்கும். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் டிரைவர்கள் பெரும் அச்சத்துடன் பயணிக்கின்றனர் என வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் தலையிட்டு, கூடுதல் பணியாளர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Source link