முன்எச்சரிக்கையாக பெட்ரோல், டீசலை பெரிய கேன், பாட்டில்களில் வாகன ஓட்டிகள் வாங்கி சென்றனர். ஆனால் 21 நாட்கள் தேவையான பெட்ரோல், டீசல் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெட்ரோல் பங்குகளில் நிற்பதை பார்க்க முடிகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விற்று தீர்ந்து, பல பங்குகள் மூடப்பட்டு உள்ளது.
பழனி – பெட்ரோல் பங்க் மேலாளர் : வழக்கமாக நடைபெறும் பெட்ரோல், டீசல் விற்பனையை விட, 3 மடங்கு விற்பனை ஆனது. இதன் காரணமாக பங்க் தற்காலிகமாக மூடியுள்ளோம். எச்பி நிறுவனத்திடம் லோடு கேட்டு இருக்கிறோம், லோடு வந்த உடன் மீண்டும் விற்பனையை தொடங்கி விடுவோம்.
ஏழுமலை – தனியார் நிறுவன ஊழியர் : காலையில் இருந்து பல பெட்ரோல் பங்கிற்கு சென்று வந்துவிட்டேன். எங்கும் பெட்ரோல் இல்லை. வேலை நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறேன். இப்படி பெட்ரோல் டிமாண்ட் ஆகும் என நினைத்து பார்க்க முடியவில்லை.
கணேஷ் – சேல்ஸ்மேன் : 4 பெட்ரோல் பங்கிற்கு சென்று வந்துவிட்டேன். தற்போது வந்து இருப்பது 5 வது பெட்ரோல் பங்க். என்னுடைய அலுவலகம் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. என்னுடைய டூ விலரில் 10 கி.மீட்டர் செல்லும அளவுக்கே பெட்ரோல் உள்ளது. லோடு வந்தால் மட்டும் பெட்ரோல் தருவோம் என கூறுகிறார்கள். என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன்.
முரளி – தனியார் நிறுவன ஊழியர் : அயனாவரம் பகுதியில் இருக்கும் 4 பெட்ரோல் பங்கும் மூடப்பட்டு இருக்கிறது. காலையில் இருந்தே பெட்ரோல் போட பங்கு பங்காக அலைந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எங்கும் பெட்ரோல் இல்லை. நான் வரும் வழியில் பலர் பெட்ரோல் இல்லாமல் டூ விலரை தள்ளி கொண்டு போகின்றனர். வண்டியை விட்டு விட்டு பஸ்ஸில் வேலைக்கு போகலாம் என இருக்கிறேன்.

