ராஜஸ்தான்,
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் ‘மிகவும் அழியும் தருவாயில் உள்ள’இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால், ராஜஸ்தானில் உள்ள பாதுகாப்பு இனப்பெருக்க மையத்தில் இந்த வாரம் இரண்டு புதிய குஞ்சுகள் பொரித்ததன் மூலம்,கானமயில் பாதுகாப்புத் திட்டம் அதன் பிரத்யேக மையங்கள் இனப்பெருக்கத்தின் நான்காவது ஆண்டில் நுழைந்தது,ஒன்று இயற்கை இனச்சேர்க்கை மூலமாகவும் மற்றொன்று செயற்கை கருவூட்டல் மூலமாகவும் குஞ்சு பொரித்தது, இதனால் பிரத்யேக மையங்கள் பறவைகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.
குஞ்சுகள் நேரடியாகக் காட்டில் விடப்படாமல், ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு தற்காலிகக் கூண்டில் வைக்கப்பட்டிருக்கும். காட்டில் தானாகவே உணவு தேடவும், தற்காத்துக் கொள்ளவும் பழகிய பிறகு, மெதுவாக அந்தக் கூண்டுகள் திறக்கப்பட்டு அவை முழுமையாகக் காட்டுக்குள் அனுமதிக்கப்படும் இத்திட்டத்திற்கு ஒரு புதிய சவாலான தொடக்கத்தைக் குறிக்கிறது.
மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இந்தச் சாதனைக்காக ராஜஸ்தான் வனத்துறையின் வன அதிகாரிகளுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
