2வது ஒருநாள் போட்டி: வங்காளதேச அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

மிர்புர்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மிர்புரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ் தான் 114 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே ” மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடியது. பாகிஸ்தான் அணியில் மாஸ் சதகத், சல்மான் ஆகா இருவரும் அரைசதம் அடித்தனர். மாஸ் சதகத் 75 ரன்களும், சல்மான் ஆகா 64 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேச அணியில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Source link