விஜய் சேதுபதி முத்து என்கிற காட்டான் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவாசாயி’ போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் ஆவார்.
விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் இதைத் தயாரித்துள்ளார். இத்தொடரில் விஜய் சேதுபதி, இர்ஷாத் அலி, பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பாரு ஆகியோரும் நடித்துள்ளனர்.சமீபத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரின் டீசர் வெளியானது.
இந்த நிலையில், ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்தொடர் வரும் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
