சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை,

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. கிராம பகுதிகளில் இந்த இடைவெளி 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களிலும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சில ஹோட்டல்கள் விறகு அடுப்பு முறைக்கு மாற தொடங்கியுள்ளன. சிலிண்டர் விநியோகம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் கையிருப்பு முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தேவை, கையிருப்பு குறித்து தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

Source link