பாபர் அசாம் மீதான பாலியல் புகார் சர்ச்சை… லாகூர் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொல்லை புகார் தொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பிறப்பிக்கப்பட்ட கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை லாகூர் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஹமீசா முக்தார் என்ற பெண் பாபர் அசாம் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அந்த பெண், பாபர் அசாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இழப்பீடாக 15 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து ‘ஜஸ்டிஸ் ஆப் பீஸ்’ அலுவலகத்தை அணுகி, எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

Also Read
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் வாங்கிய விவகாரம் – பிசிசிஐ விளக்கம்
பாபர் அசாம் மீதான பாலியல் புகார் சர்ச்சை… லாகூர் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

இதையடுத்து , செஷன்ஸ் நீதிமன்றம் 2021 ஜனவரியில் பாபர் அசாம் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு எதிராக லாகூர் ஐகோர்ட்டில் பாபர் அசாம் மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை பெற்றிருந்தார்.

தற்போது அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு எப்ஐஆர் பதிவு செய்யும் உத்தரவை ரத்து செய்துள்ளது. பாபர் அசாமின் வழக்கறிஞர் ஹாரிஸ் அஸ்மத் , இந்த புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், பாபர் அசாமின் புகழைப் பயன்படுத்தி அவரிடமிருந்து ரூ.15 கோடி பறிக்க முயன்றதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் சட்டப்படி தேவையான ஆதாரங்கள் இல்லை என்று கருதிய லாகூர் ஐகோர்ட்டு எப்ஐஆர் பதிவு செய்யும் உத்தரவை ரத்து செய்துள்ளது.

Source link