என்.டி.ஏ. கூட்டணிக்கு விஜய் வருவாரா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகத்தை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த கூட்டணி விவகாரம் தொடர்பாக தவெக, அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா? பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது;

”கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காகவே விஜய் டெல்லி செல்கிறார். விஜய் டெல்லி செல்வதற்கும், கூட்டணிக்கு எந்த தொடர்பும் கிடையாது. கூட்டணிக்கு விஜய் வர விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.”

இவ்வாறு அவர் பேசினார்.

Source link