ஹார்மூஸ் ஜலசந்தியில் பதற்ற நிலைக்கு அவர்களே காரணம்… பிரிட்டனுக்கான ஈரான் தூதர்

லண்டன்

பிரிட்டனுக்கான ஈரான் தூதர் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பின் நிரந்தர பிரதிநிதியாக இருப்பவர் சையது அலி மவுசவி. இந்நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவரான ஆர்செனியோ டோமிங்கிஸ் தலைமையில் லண்டனில் நடந்த கூட்டத்தில் மவுசவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ஐ.நா. அமைப்பின் சாசனத்தின் கீழ் மற்றும் தன்னுடைய உரிமைக்கான கட்டமைப்பில் இருந்து கொண்டு, சுய பாதுகாப்பிற்காக ஈரான் நாடு செயல்பட்டு கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

Also Read
மராட்டியம்: 29 ஆண்டு கால காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மத்திய மந்திரி
ஹார்மூஸ் ஜலசந்தியில் பதற்ற நிலைக்கு அவர்களே காரணம்... பிரிட்டனுக்கான ஈரான் தூதர்

ஈரான் தன்னுடைய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேச நலன்களை பாதுகாக்க ராணுவத்தின் அனைத்து திறன்களையும் பயன்படுத்தும் என அப்போது கூறினார். மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்புகளை தாக்குவோம் என அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது என சுட்டி காட்டி பேசிய மவுசவி, சர்வதேச தொடர் விதிமீறலாக இந்த அச்சுறுத்தல்கள் உள்ளன என குறிப்பிட்டார்.

இந்த விதிமீறல்களுக்கு எதிராக, சர்வதேச கடல்சார் அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

இந்த தொடர்ச்சியான அத்துமீறல்களே, ஹார்மூஸ் ஜலசந்தியில் பதற்றம் நீடிப்பதற்கான காரணிகளாக உள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து மேற்கொள்ளும் சட்டவிரோத மற்றும் பொறுப்பற்ற செயல்களே இதற்கு காரணம் என அவர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்காசியாவில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது.

Source link