திருப்பத்தூர்,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்ட பணிகளை திறந்து வைத்து, 4,946 பயனாளிகளுக்கு ரூ.100.49 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் தாட்கோ திட்டத் துறையின் சார்பில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி குரும்பேரி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடம், நத்தம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறை கட்டடங்கள், ஆம்பூரில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மைய கட்டடம்,
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் திருப்பத்தூரில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஆம்பூரில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையம், என மொத்தம், ரூ.3 கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்டப் பணிகளை இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,469 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,050 மகளிருக்கு ரூ.50.00 கோடி கடனுதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.42.00 கோடி மதிப்பீட்டில் 1,200 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்கான ஆணைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள், கூட்டுறவுத் துறையின் சார்பில் 381 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடியில் கடனுதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 253 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள், 72 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரங்கள்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.63.00 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தொழில் வணிகத் துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி காசோலைகள்,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 200 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்,
வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.35லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானியத்துடன் வோளாண் இயந்திரங்கள்,
சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் விபத்து நிவாரணம், திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை காசோலைகள்,
தொழிலாளர் நலத் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்திற்கான திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் மற்றும் இயற்கை மரணம் உதவித்தொகை காசோலைகள்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 90 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.55.00 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள்,
தோட்டக்கலைத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.21.00 லட்சம் மதிப்பீட்டில் வெங்காய சேமிப்பு கிடங்கு, நிழல் வலை குடில், பண்ணை குட்டை அமைக்க உதவிகள்,
மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் 15 குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்திற்கான உதவித்தொகை காசோலைகள்,
தாட்கோ சார்பில் 5 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள், 25 பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், என மொத்தம் 4,946 பயனாளிகளுக்கு ரூ.100 கோடியே 49 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், அமுலு விஜயன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவசௌந்திரவல்லி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
