ரன் அவுட் விதிகளுக்கு உட்பட்டே இருந்தது..வங்காளதேச வீரர்

மிர்புர்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியின் போது சல்மான் ஆகா ரன் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியது
மெஹிதி ஹசன் வீசியா39வது ஓவரை எதிர்கொண்ட பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், பந்தை பேட்ஸ்மேனை(சல்மான் ஆகா) நோக்கி அடித்தார். இதனால் சல்மான் ஆகா பந்தை எடுத்து பந்துவீச்சாளரிடம் கொடுக்க முயன்றார். ஆனால் சல்மான் ஆகா (கிரீஸ்) வெளியே நின்று இதை செய்ய நினைத்ததால் அதற்குள் பந்தை எடுத்து மெஹிதி ஹசன் ரன் அவுட் செய்தார்.இதனால் கடும் கோபமடைந்த சல்மான் ஆகா வங்காளதேச அணியினரை நோக்கி சீறினார். மேலும் பேட்டை தூக்கி எறிந்து சென்றார்.

இந்த நிலையில், யாரும் இங்கே தர்மம் செய்ய வரவில்லை என வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள், யாரும் இங்கே தர்மம் செய்ய வரவில்லை. இது ஒரு சர்வதேசப் போட்டி. அந்த ஆட்டமிழப்பு கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே இருந்தது என்பதால், எந்தக் கோணத்திலும் விளையாட்டுத் தர்மம் மீறப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஒரு வீரராக, விதிகளின்படி அவுட் என்றால் அது அவுட் தான் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என தெரிவித்தார்.

Source link