சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அரக்கோணம்-ஜோலார்பேட்டை பாதையில் ஜோலார்பேட்டை யார்டில் தண்டவாள பாதை மற்றும் மின்சார பராமரிப்பு பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை மதியம் 2.10 முதல் மாலை 4.10 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று முதல் 17-ந் தேதி வரை மின்சார ரெயில் சேவையில் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கே.எஸ்.ஆர். பெங்களூரு- ஜோலார்பேட்டை மின்சார ரெயில் (வண்டி எண் 66550) சோமநாயக்கன்பட்டி- ஜோலார்பேட்டை இடையேயும், மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (66549) ஜோலார்பேட்டை-சோமநாயக்கன்பட்டி இடையேயும் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல ஈரோடு-ஜோலார்பேட்டை மின்சார ரெயில் (56108) திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையேயும், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டை- ஈரோடு மின்சார ரெயில் (56017) ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் இடையேயும் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
