எடப்பாடி பழனிச்சாமியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது: ஓ பன்னீர் செல்வம் பேச்சு

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட லாடியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வநத முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நன்றி மறந்த ஆள் யாரென்றால், எடப் பாடி பழனிசாமிதான். ஊர்ந்து, ஊர்ந்து காலை தொட்டு பதவி வாங்கியவர். அவரது 4½ ஆண்டு ஆட்சியை காப்பாற்றியது நான்தான். ஆனால் எந்த இடத்திலும் நான் இருக்கக்கூடாது என வேலைசெய்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் குண்டர்களை வைத்து 23 தீர்மானங்களை கொண்டு வந்தார். அதிமுகவை படுகுழியில் தள்ளியிருக்கிற பழனிசாமியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது” என்றார்.

Source link