திருநெல்வேலி: கொடுங்காயம் ஏற்படுத்திய குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு இருவருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த அருள்சந்தானம் (வயது 46) என்பவரை, அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(40) என்பவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஐயப்பன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரவீன்ஜீவா நேற்று குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதாம்அலி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் ஏட்டு ஃபெமிலா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் வனிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

Source link