சஞ்சு சாம்சனின் திறமையில் சந்தேகமில்லை – கவுதம் கம்பீர் புகழாரம்

டெல்லி,

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் திறமையில் சந்தேகமில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவுதம் கம்பீர் கூறியதாவது,

சஞ்சு சாம்சன் என்ன செய்வார் என்பது எங்களுக்கு தெரியும். அவரின் திறமையிலோ, அதிரடி ஆட்டத்திலோ எங்களுக்கு சந்தேகமில்லை. அவர் நிலைத்துநின்று ஆடத்தொடங்கிவிட்டால் அவர் முதல் 6 ஓவர்களிலேயே அணியை வெற்றிபெற வைத்துவிடுவார்

என்றார்.

Source link