பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் டிரெய்லரை பாராட்டிய சிரஞ்சீவி

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார்.

துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஹரிஹர வீர மல்லு, ஓஜி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ‘ஓஜி’ படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

மைத்ரி மூவி மேக்கரஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கப்பர் சிங்’ படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தணிக்கை வாரியம் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் டிரெண்டிங்கில் வருகிறது.இப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் டிரெய்லருக்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் “அற்புதம் நடந்திருக்கிறது… முகூர்த்தம் சரியான இடத்தில் விழுந்துள்ளது… டிரெய்லர் மிகவும் நன்றாக இருக்கிறது. உகாதியில் வெளியாகும் உஸ்தாத் பகத்சிங், எல்லாமே நல்லவையாக நடக்க எனது வாழ்த்துகள். படக்குழு, கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

Source link