டாக்கா,
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
