சென்னை,
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்.9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவிற்கு இன்னும் 24 நாட்களே உள்ளன. நாளை (மார்ச் 16) முதலே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்குதலுக்கான கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்தநிலையில், பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
பொதுவாக தமிழ்நாடு ,கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்தமுறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமில்லை.
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும் ,அரசியல் புரிதலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. இந்தியா கூட்டணிக்கும் உண்டு என அதில் பதிவிட்டுள்ளார்.
