புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான் ராகுல் டிராவிட்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற ஐசிசி தலைவர் ஜெய் ஷா விருது வழங்கினார். மேலும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
