சென்னை,
சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்கள் 16865,16866), சென்னை எழும்பூர்- மங்களூரு சென்டிரல் (வண்டி எண்கள் 16159, 16160) எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் பரீட்சார்த்த அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) முதல் திண்டிவனத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
சென்னை எழும்பூர் -தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டிவனத்திற்கு நள்ளிரவு 12.13 மணிக்கு வந்து 12.15 மணிக்கு புறப்படும் என்றும் மறுமார்க்கத்தில் அதிகாலை 2.13 மணிக்கு வந்து 2.15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைபோல சென்னை எழும்பூர்- மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டிவனத்திற்கு நள்ளிரவு 12.58 மணிக்கு வந்து 1 மணிக்கு புறப்படும் என்றும் மறுமார்க்கத்தில் 1.15 மணிக்கு வந்து 1.17 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
