லாஸ் ஏஞ்சல்ஸ்,
திரைப்பட உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 2026 விழாவில் பல முக்கிய பிரிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன் பேட்டில் அனதர் திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை வென்று கவனம் பெற்றுள்ளது.
* சிறந்த மாற்று திரைக்கதை
இந்த பிரிவில் ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ (One Battle After Another) திரைப்படம் சிறந்த மாற்று திரைக்கதை விருதை வென்றது.
* சிறந்த துணை நடிகர்
ஹாலிவுட் நடிகர் சீன் பென், ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார்.
* சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
இந்த பிரிவில் சமநிலை ஏற்பட்டதால் இரண்டு படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அவை தி சிங்கர்ஸ் (The Singers) மற்றும் டூ பெஒப்லே எக்சேஞ்சிங் சாலிவா (Two People Exchanging Saliva) ஆகியவை.
முதல் முறையாக வழங்கப்பட்ட ‘சிறந்த காஸ்டிங்’ (Best Casting) விருது
ஆஸ்கார் வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமான ‘பெஸ்ட் காஸ்டிங்’ விருதை காஸ்டிங் இயக்குனர் காசண்ட்ரா குலுகுண்டிஸ் பெற்றார். இவர் ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படத்திற்காக இந்த விருதை வென்றார்.
* சிறந்த மேக்கப் மற்றும் தலைமுடி அலங்காரம்
பிராங்கன்ஸ்டைன் (Frankenstein) திரைப்படத்திற்காக மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் க்லியோனா பியூரி ஆகியோர் இந்த விருதை பெற்றனர்.
* சிறந்த உடை வடிவமைப்பு
கேட் ஹாவ்லி, கில்லர்மோ டெல் டோரோவின் இயக்கிய பிராங்கன்ஸ்டைன் (Frankenstein) திரைப்படத்திற்காக சிறந்த உடை வடிவமைப்பு விருதை வென்றார்.
* சிறந்த அனிமேஷன் திரைப்படம்
கே பாப் டெமோன் ஹன்டர்ஸ் (KPop Demon Hunters) திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த பிரிவில் Arco, Elio, Little Amelie or the Character of Rain மற்றும் Zootopia 2 ஆகிய படங்களும் போட்டியிட்டன.
* சிறந்த துணை நடிகை
நடிகை எமி மடிகன்,வெப்பன்ஸ் (Weapons) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருதை பெற்றார்.
இந்த பிரிவில் டெய்னா டெய்லர் (ஒன் பேட்டில் அனதர் திரைப்படத்திற்காக), வுன்மி மொசாகு ( சின்னர்ஸ்), எல்லே பான்னிங் மற்றும் இங்கா இப்ஸ்டோட்டர் (செண்டிமெண்டல் வேல்யூ) ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
* சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ் விருது – “அவதார் – ஃபயர் அண்ட் ஆஷ்”
ஜோ லெட்டெரி, ரிச்சர்ட், போன்ஹோம், எரிக் சைண்டன், டேனியல் பாரெட் ஆகியோர் சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ் விருதை வென்றனர்.
* சிறந்த ஆவணப்படம்
“ஆல் தி எம்ப்டி ரூம்ஸ்” (All the Empty Rooms) சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது. இந்த விருது புடினுக்கு எதிராக உருவாக்கப்பட்ட “MR. NOBODY AGAINST PUTIN”-க்கு வழங்கப்பட்டுள்ளது.
