சென்னை,
தாம்பரம் – காரைக்கால் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரம் – காரைக்கால் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16175/16176) பேராளம், காரைக்கால் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுகிறது. வரும் 20-ந் தேதி முதல் இந்த நீட்டிப்பு நடைமுறைக்கு வருகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 4.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது. இந்த ரெயில், பேராளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
