வங்காளதேசத்துடன் தோல்வி – “தவறுகளை ஏற்காவிட்டால்…”: பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்

டாக்கா,

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது ஷெஹ்சாத் அணியின் தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி, வங்காளதேச அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. டாக்காவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியைத் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் பேசிய அகமது ஷெஹ்சாத், “டி20 உலக் கோப்பை தொடரில் மோசமான செயல்பாடு இருந்தபோதும் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. திடீரென இளம் வீரர்களை கொண்டு வந்தீர்கள். இப்போது தொடரை இழந்த பிறகு அதையே காரணம் காட்டுகிறீர்கள். தங்களுடைய தவறுகளை ஏற்காவிட்டால் முன்னேற முடியாது” என்று கடுமையாக விமர்சித்தார்.

Also Read
விராட் கோலியின் ஆல்-டைம் ‘ஆர்சிபி 11’… கும்ப்ளே, ராகுலுக்கு இடம்
வங்காளதேசத்துடன் தோல்வி - “தவறுகளை ஏற்காவிட்டால்…”: பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்

மேலும், டாஸ் வென்ற பிறகு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த கேப்டன் ஷாஹீன் ஷா ஆப்ரிடியின் முடிவையும் ஷெஹ்சாத் விமர்சித்தார். “நீங்கள் டாஸ் வென்ற பிறகு, ஏன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தீர்கள்? பிச்சு நல்ல நிலையில் இருந்தது. முதலில் பேட்டிங் செய்து ரன்கள் சேர்த்திருக்க வேண்டும், பிறகு விளக்கு வெளிச்சத்தில் பந்து வீச வேண்டும். மூத்த வீரர்கள் இப்படிப் செய்யும்போது, இளம் வீரர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்’ என்றார்.

பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனால் அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Source link