கராச்சி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரஹீம் யார் கான் நகரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது உணவும், பணமும் கொடுக்கப்படும். இதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டனர்.
இந்நிலையில், அவர்கள் வந்தபோது, கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 8 பெண்கள் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
2007-ம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியும் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, பெனாசீர் பூட்டோவின் பெயரில் இந்நிகழ்ச்சி நடநத்து.
கடந்த 2023-ம் ஆண்டு கராச்சி நகரில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு இதுபோன்று உணவும், பணமும் வாங்க நூற்றுக்கணக்கானோர் சென்றபோது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 11 பேர் பலியானார்கள்.
