பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி

பெங்களூரு,

19வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த ஆண்டு ஜுன் 4ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த விதிக்கப்பட்ட தடையை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சின்னசாமி மைதானத்தில் நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link