‘தோனி பல கிரிக்கெட்டர்களின் கெரியரை வடிவமைத்துள்ளார்’ – ஷிகர் தவான்

சென்னை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், எம்.எஸ் தோனி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி பல வீரர்களின் கெரியரை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தார் என கூறி இருக்கிறார்.

தனது வாழ்க்கையில் கடினமான நேரத்தில் பக்கத்தில் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “எம்.எஸ். தோனி ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் அந்த வீரருக்கு வாய்ப்புகளை வழங்குவார். 1-2 போட்டிகளுடன் அவரை நிறுத்திவிட மாட்டார். அந்த வீரரால் அப்போது பெரிய தாக்கம் ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில் அவர் நல்ல விளைவுகளை கொடுப்பார் என்று நம்புவார். அதற்காகவே அணியில் அதிக மாற்றங்களைச் செய்ய மாட்டார்.

Also Read
வங்காளதேசத்துடன் தோல்வி – “தவறுகளை ஏற்காவிட்டால்…”: பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்
‘தோனி பல கிரிக்கெட்டர்களின் கெரியரை வடிவமைத்துள்ளார்’ - ஷிகர் தவான்

தோனி எப்போதும் வீரர்களை ஊக்குப்பார். தேவையெனில் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்குவார். தோனி எனது வாழ்க்கையில் கடினமான நேரத்தில் பக்கத்தில் இருந்தார். அதனால் நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

Source link