சென்னை,
தெற்கு ரெயில்வேயின் பாலக்காடு கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மங்களூரு சென்ட்ரல்- ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்.16622), ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 10.50 மணிக்கு ராமேசுவரத்தை அடையும்.
மறுமார்க்கமாக, ராமேசுவரம்-மங்களூரு சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் (ரெயில் எண். 16621) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராமேசுவரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை வந்தடையும்.
இந்த நேரடி வாராந்திர சேவையை அறிமுகப்படுத்துவது, கடலோர நகரத்திற்கும் கோவில் நகரமா நகரமான ராமேசுவரத்திற்கும் இடையே அடிக்கடி பயணிக்கும் யாத்ரீகர்கள் மற்றும் பயணிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
