நைஜீரியா: ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் 162 பேர் பலி

குவாரா,

நைஜீரியாவின் மேற்கே குவாரா மாகாணத்தில் உள்ள வோரோ மற்றும் நுகு என்ற இரண்டு கிராமங்களில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர் நேற்று மாலை புகுந்தனர்.

அவர்கள் மக்களை நோக்கி திடீரென தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், 162 பேர் கொல்லப்பட்டனர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் முகமது உமர் பையோ உறுதிப்படுத்தியுள்ளார். இது சமீப காலங்களில் நடந்த மிக கொடூர தாக்குதல்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Also Read
பிரதமர் மோடி மலேசியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம்

நைஜீரியா:  ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் 162 பேர் பலி

ஐ.எஸ். அமைப்புடன் இணைந்த லகுராவா என்ற ஆயுத குழுவானது இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது என்றும் அவர் கூறினார். சமீப காலங்களாக இந்த குழுக்கள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களிடும் ஈடுபட்டு வருகின்றன.

Source link