பொதுமக்களுடன் உரையாடல்; மரண வதந்திகளுக்கு இடையே நெதன்யாகு வெளியிட்ட மற்றொரு வீடியோ

டெல் அவிவ்

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் தகவல்கள் பரவின.

இதில், சமூக ஊடகத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் நெதன்யாகு போன்ற முகம் கொண்ட நபர் ஒருவர் காயத்துடன், இடிபாடுகளுக்கு இடையே காணப்படுகிறார். அவருக்கு வீரர்கள் உதவிடும் காட்சி பதிவாகி உள்ளது. அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமுற்றார் என்றும், இதுவே அவருடைய கடைசி புகைப்படம் என்றும் பலர் கூறினர்.

Also Read
ஜப்பானில் 2 படகுகள் கவிழ்ந்ததில் 2 பேர் பலி
பொதுமக்களுடன் உரையாடல்; மரண வதந்திகளுக்கு இடையே நெதன்யாகு வெளியிட்ட மற்றொரு வீடியோ

எனினும், இது ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம் அல்லது டிஜிட்டல் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இருக்க கூடும் என்றும், தாக்குதலில் நெதன்யாகு காயமடைந்ததற்கான ஆய்வு செய்யப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் அதற்கு பதிலாக கூறப்பட்டது.

சமூக ஊடக பயனாளர்கள் சிலர், போரின்போது அவர் கொல்லப்பட்டு விட்டார் அல்லது காணாமல் போய் விட்டார் என தகவல்களை பரப்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், இது பொய்யான தகவல். பிரதமர் நெதன்யாகு நன்றாக உள்ளார் என பதிலளித்து உள்ளது.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பிரதமர் நெதன்யாகு நன்றாக உள்ளார் என கூறினார்.

சில ஊடக பயனாளர்கள் கூட அது பொய்யான, ஏ.ஐ. உருவாக்கிய வீடியோ என கூறினர். ஏனெனில், பிரதமரின் வலது கையில் 6 விரல்கள் இருப்பது போன்று வீடியோவில் காட்சிகள் இருந்தன. அவர் கையை உயர்த்தும்போது, 6-வது விரல் இருப்பது போன்று தெரிந்த காட்சியால், அது ஏ.ஐ. உருவாக்கிய தவறால் ஏற்பட்டு உள்ளது என உறுதியாக கூறினர்.

இந்த மரண வதந்திகளுக்கு இடையே நெதன்யாகு மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில், அவர் மக்களுடன் மக்களாக ஒன்றாக நின்றபடியும், அவர்களுடன் உரையாடி கொண்டும் இருக்கிறார். அவரை சுற்றி முக கவசம் அணிந்தபடி, பாதுகாவலர்கள் பாதுகாப்பிற்காக நிற்கின்றனர். ஆனால், அவர் முக கவசம் எதுவும் அணியாமல் காணப்பட்டார். மக்கள் சிலரிடம் கைகுலுக்கியும், சிரித்து பேசியபடியும் வீடியோவில் காணப்பட்டார்.

இதற்கு முன்பு, கடைக்கு சென்று காபி குடிக்கும் வீடியோவை வெளியிட்டார். அப்போது, தன்னுடைய இரு கைகளையும் அடுத்தடுத்து உயர்த்தி, காண்பித்து 5 விரல்கள் உள்ளன என காட்டினார்.

Source link