இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய பூனம் பாஜ்வா- பெண்கள் பற்றி சுவாரஸ்ய கருத்து

‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘சேவல்’, ‘தம்பிக்கோட்டை’ போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்க சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பூனம் பாஜ்வா, சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். அமுல்பேபி போல இருக்கும் அவரை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பின் தொடருகிறார்கள்.

இதற்கிடையில் ரசிகர்களிடையேயான ஒரு கலந்துரையாடலில் பூனம் பாஜ்வா பேசும்போது. “உங்களுடன் தோழியாக, காதலியாக, மனைவியாக பயணிக்கும் பெண்கள் எந்த ஒரு தேசத்துக்கும் மகாராணியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை ராணிகளாக போற்றி கொண்டாடுங்கள். அவர்களின் அழகையும், அன்பையும், ஆளுமையையும் பாராட்டுங்கள். ஓ.கே. எல்லாத்தையும் மறந்துடலாம் என்று சொல்லும் பெண்களிடம் உஷாராக இருங்கள். ஏனெனில் பெண்கள் எதையும் மறப்பதில்லை, குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் வரும் மற்ற பெண்கள் சார்ந்த விஷயங்களை மறக்கவே மாட்டார்கள். எனவே பெண்களிடம் உஷாராக இருங்கள், ஜாக்கிரதை”, என்று குறிப்பிட்டார்.

Source link