நீலகிரி: குன்னூரில் ஆலங்கட்டி மழை.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தரையில் ஆலங்கட்டிகள் கொட்டி கிடந்தன. இதை பார்த்த விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிலர் ஆலங்கட்டியை கையில் அள்ளி உற்சாகம் அடைந்தனர். மேலும் ஆலங்கட்டி மழை பெய் வதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இது வைரலானது. இதேபோல கோத்தகிரி பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Source link