சண்டிகார்,
அரியானாவில் முதல்-மந்திரி நயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை அக்கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், இந்த முறை நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
இந்நிலையில், அரியானா முதல்-மந்திரி நிருபர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் கட்சி கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அதனால், வளர்ச்சியின் வேகத்திற்கு இடையூறு ஏற்படுத்த அக்கட்சி முயன்று கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு விரைவாக வளர்ந்து வருகிறது. அரியானாவை எடுத்து கொண்டால், 11 ஆண்டுகளில் 1.6 லட்சம் வீடுகளை நாங்கள் கட்டி, கொடுத்துள்ளோம், நாங்கள் பல விசயங்களை செய்து வருகிறோம். அதனை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என்றார்.
