எனக்கு நயன்தாரா வேண்டும்… தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் – i want nayanthara aiadmk mp cv shanmugam apologises for his controversial remark

அதிமுக எம்.பி.சி.வி.சண்முகத்தின் பேச்சு சர்ச்சையான நிலையில் அதற்கு பதிலளித்து உள்ளார்.

AIADMK MP CV Shanmugam controversy(புகைப்படங்கள்Samayam Tamil)
விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் ரீதியாக கவனம் பெற்றதுடன், அதில் இடம்பெற்ற ஒரு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்.பி சி.வி. சண்முகம், தனது உரையில் சில கருத்துகளை பகிர்ந்தபோது அது விவாதமாக மாறியது.

“கனவு காணுங்கள்” பேச்சில் திருப்பம்

போராட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய “கனவு காணுங்கள்” என்ற கருத்தை குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து, “கனவை சொல்லுங்கள், அதை நிறைவேற்றுவார்கள் என்று திமுகவின் திட்டத்தை விமர்சித்தார். அதில், அவர் கூறிய சில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

நயன்தாரா குறித்து பேச்சு – சர்ச்சை வெடிப்பு

உரையின்போது, “எனக்கு நயன்தாரா வேண்டும், அதை நிறைவேற்றுவார்களா?” என்ற வகையில் அவர் பேசியது பலரிடையே எதிர்ப்பை கிளப்பியது. பெண்களின் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒரு நடிகையை குறிப்பிட்டு இவ்வாறு பேசப்பட்டது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

சமூக வலைதளங்களில் எதிர்ப்பு

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விரைவாக பரவி, இணையவாசிகள் பலரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் குறித்து மரியாதையற்ற வகையில் கருத்து வெளியிடப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன.

விளக்கம் அளித்த சி.வி. சண்முகம்

சர்ச்சை அதிகரித்த நிலையில், சி.வி. சண்முகம் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்தார். “நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது மட்டுமே; எந்தவிதமான நோக்கத்துடனும் அது கூறப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.

வருத்தம் தெரிவித்தார்

மேலும், தனது பேச்சால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இந்த விளக்கத்திற்குப் பிறகும், அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகின்றன.