மிகுந்த கவலையளிக்கின்றன.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. 204 முன்னாள் அரசு அதிகாரிகள் பரபரப்பு அறிக்கை – 204 ex officers write letter regarding rahul gandhi parliament conduct

பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு சேவை செய்த குடிமக்கள் என்ற முறையில் ராகுல் காந்தி மற்றும் அவரது கூட்டணி கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து ஆழ்ந்த வேதனை அடைகிறோம் என 204 முன்னாள் அரசு ஊழியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் நடந்துக்கொண்ட விதத்துக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகள், தூதர்கள் உள்ளிட்ட 204 முன்னாள் அரசு ஊழியர்கள் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் டிஜிபி எஸ்.பி. வெய்ட் தலைமையில், கையெழுத்திட்டுள்ளனர்.

இன்சிய நாடாளுமன்றம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நம்முடைய அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் இந்திய நாடாளுமன்றம் ஒரு தனித்துவமான, உயர்ந்த இடத்தினை பெற்றுள்ளது. ஜனநாயக விவாதத்திற்கான உச்ச மன்றமாகும் இது. இங்கு மக்களுடைய கூட்டு விருப்பங்கள் வெளிப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் உறுப்பினர்களின் நடத்தை, கண்ணியம் மிக உயர்ந்த தரங்களுடன் இருக்க வேண்டும். மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அவைகளுக்கு அளிக்கபடும் புனிதத்தன்மை நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கு சமமான பொருந்தும்.
கவலை அளிக்கும் நிகழ்வுகள்
இந்நிலையில் மார்ச் 12 அன்று காணப்பட்ட நிகழ்வுகள் மிகுந்த கவலையளிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் சபாநாயகர் அவர்களால் தடை செய்யப்பட்டு, தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தபோதிலும், திரு. ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி இந்த உத்தரவினை புறக்கணிக்கத்தது. வேண்டுமென்றே சபாநாயகரின் உத்தரவை மீறுவது நடைமுறையை மீறுவது மட்டுமல்ல.
அது நாடாளுமன்ற அதிகாரத்தை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகும். அதோடு ஒரு அரசியலமைப்பு சட்டத்தின் கண்ணியத்தை விடவும் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விவாதிப்பதற்காக ஒன்றுக்கூடும் இடமாகவே நாடாளுமன்றம் கருதப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திரு ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தனது நாடகத்தனமான செயல்களால் அவையின் கண்ணியத்தை குறைத்துள்ளார்.
Samayam Tamilஅதிமுக கூட்டணியில் விஜய்.. ஜெயக்குமார், செல்லூர் ராஜூ கருத்தை பெரிதாக்க வேண்டாம்.. கே.பி. முனுசாமி அதிரடி இத்தகைய செயல்கள் ஜனநாயகத்தின் மீதான மரியாதையை விடவும், தனிப்பட்ட விருப்பத்தால் அதிகம் உந்தப்பட்ட ஒரு நடத்தை முறையை காட்டுகின்றது. நாடாளுமன்றம் ஆழ்ந்த விவாதங்களுக்கான ஒரு மன்றமாக இல்லாமல், ஆத்திரமூட்டும் செயல்களுக்கான ஒரு களமாக மாற்றப்படுகிறது. இத்தகைய செயல்பாட்டால் மதிப்புமிக்க பொது நேரமும், வளங்களும் வீணடிக்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைக்கப்படவோ அல்லது முக்கியத்துவம் குறைக்கப்படவோ கூடாது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி அரசாங்கத்தை கேள்வி கேட்கும் விதமாக தனது முயற்சிகளால் நமது நாட்டின் மற்றும் ஜனநாயகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர் போன்ற பொறுப்பான மற்றும் முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் வரையறுத்து வரும் கண்ணியம் மற்றும் நிதானம் ஆகிய மரபுகளை கடைபிடிக்கும்போது, நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மை வலுப்படுத்தப்படுகிறது.
கண்டிக்க வேண்டியது கடமை
பல ஆண்டுகளாக பொது சேவை செய்த குடிமக்கள் என்ற முறையில் ராகுல் காந்தி மற்றும் அவரது கூட்டணி கட்சி உறுப்பினர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை காணும்போது நாங்கள் ஆழ்ந்த வேதனை அடைகிறோம். இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகப்பதற்கும், வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்ட மக்களாகிய நாம், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் செயல்களை கண்டிக்க வேண்டியது கடமை,

ராகுல் காந்தி தன்னுடைய செயலுக்காக நட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அதற்கு காரணமான தனது மனப்பான்மையை சுயபரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தின் புனிதம் முழுமையாக பாதுகாக்கப்படும்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.