மம்தாவின் மாஸ்டர் மூவ்.. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே மேற்கு வங்க அரசின் அதிரடி அறிவிப்பு! – mamata banerjee on announced rs 500 increase in monthly honorarium for purohits and muezzins in wb

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதி என்று இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Mamata Banerjee
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் அந்த மாநிலங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அந்த வகையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15 ஆம் தேதி) வெளியிட்டது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்

அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அரசால் முக்கிய அறிவிப்பு

இந்த இரு கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பாகவே மாநில அரசால் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

மம்தா பானர்ஜி அறிவிப்பு

குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த அகவிலைப்படியை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வழங்கும் முடிவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

அகவிலைப்படி கோரிக்கை

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதன் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அகவிலைப்படி தொடர்பான கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என அந்த மாநில அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மாதந்திர கௌரவ ஊதியம்

இதற்கிடையில் மத தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அர்ச்சகர்கள் மற்றும் மௌலவிகளுக்கான மாதாந்திர கௌரவ ஊதியத்திலும் உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,500 கவுரவ ஊதியம் ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.2,000 ஆக மாற்றப்பட்டு உள்ளது.

அரசு ஒப்புதல்

இதன் மூலம் அந்த பணியில் ஈடுபட்டுள்ள பலருக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் புதியதாக விண்ணப்பித்திருந்த அர்ச்சகர்கள் மற்றும் மௌலவிகளின் விண்ணப்பங்களுக்கும் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

அறிவிப்புகள் வெளியிட முடியாது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்பது வழக்கம். அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு அரசால் புதிய நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிட முடியாது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே இந்த அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வெளிப்படையாக பேசப்போகும் விஜய்_ தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு_

மம்தாவின் மாஸ்டர் பிளான்

ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே மக்கள் மனதை கவரும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.