ஐபிஎல் – கம்மின்ஸை தவறவிடும் ஐதராபாத்… புதிய கேப்டன் இவரா?

சென்னை,

ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக தொடக்கப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரது இடத்தில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read
கெயில் – கோலி இல்லை… ’ஐபிஎல் வரலாற்றில் மிக ஆபத்தான ஓப்பனர்கள் அவர்கள்தான்’ – புஜாரா
ஐபிஎல் - கம்மின்ஸை தவறவிடும் ஐதராபாத்… புதிய கேப்டன் இவரா?

கம்மின்ஸ் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் காயம் அடைந்தார். அதன் பின்னர், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்ட் மட்டுமே விளையாடிய அவர், டி20 உலகக்கோப்பையையும் தவறவிட்டார். இந்த நிலையில், ஐபிஎல் தொடக்கப் போட்டிகளிலும் அவர் இல்லாமற்போகலாம் என தெரிகிறது.

இதனால், ஐதராபாத் அணியின் நிர்வாகம் கேப்டன்சி பொறுப்பை இஷான் கிஷனிடம் ஒப்படைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜார்கண்ட் அணியை சையத் முஷ்டாக் அலி டிரோபியில் வழிநடத்திய அனுபவம் மற்றும் சமீபத்தில் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக, இஷான் கிஷன் கேப்டன்சிக்கு பொருத்தமானவர் என்று நிர்வாகம் கருதுவதுபோல் தெரிகிறது.

ஐபிஎல் 2026 சீசனில், ஐதராபாத் அணி வருகிற 28-ம் தேதி நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியை எதிர்கொண்டு முதல் போட்டியை விளையாட உள்ளது.

Source link