தென் தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியாக பார்க்கப்படும் முக்குலத்தோர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக டிடிவி தினகரனின் வருகையால் எடப்பாடி பழனிசாமி லாபம் அடைவாரா? ஏமாற்றம் அடைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தெற்கில் ஆதிக்கம் செலுத்தும் தேவர் சமூகம்
இந்த தேர்தலில் தேமுதிக உடன் அமமுக கூட்டணி வைத்து 166 தொகுதிகளில் போட்டியிட்டது. இதன்மூலம் 2.4 சதவீத வாக்குகளை பெற்றது. கோவில்பட்டி, உசிலம்பட்டி, காரைக்குடி, மன்னார்குடி, திருவையாறு, மேலூர், திருவாடானை, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் தேவர் சமூக வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. இவை திமுக கூட்டணிக்கு கைகொடுக்க வெற்றிக் கனி பறித்தது. அதிமுக 2வது இடத்தையும், அமமுக 3வது இடத்தையும் பிடித்தது.
தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆
அதிமுக முக்குலத்தோர் தலைவர்கள்
ஒருவேளை இந்த இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டிருந்தால் திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்திருக்க வாய்ப்புண்டு. அந்த தேர்தலில் அதிமுகவின் 17 தொகுதிகள், திமுகவின் 5 தொகுதிகளில் தோல்விக்கு அமமுக பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்தது. ஏற்கனவே அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தேவர் சமூக தலைவர்கள் இருந்தாலும் டிடிவி தினகரனின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை.
அதிமுகவிற்கு அமமுக பலனளிக்குமா?
இதை உணர்ந்ததால் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகள் அமமுக மூலம் அதிமுகவிற்கு வந்து சேருமா? இல்லையா? என்பதை தான். இதே முக்குலத்தோர் வாக்கு வங்கி கணக்கில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளை திமுக தங்கள் கூட்டணிக்குள் இழுத்தது.
எடப்பாடி பழனிசாமி மீது கோபம்
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உடன் டிடிவி தினகரன் கைகோர்த்ததை அமமுக தொண்டர்கள் சிலர் விரும்பவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில் சசிகலா, டிடிவி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கின்றனர். இக்கட்சியில் தூத்துக்குடி மண்டலத்தில் முக்கியமான நபராக விளங்கிய எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் உடன் திமுகவில் இணைந்து அதிர்ச்சி அளித்தார்.
வாக்குகளை சிதறடிக்கும் கட்சிகள்
மேலும் பலர் கட்சி தாவ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெற்றிருப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமா? என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி சசிகலா பரபரப்பை கிளப்பியுள்ளார். இவை அனைத்தும் முக்குலத்தோர் வாக்குகளை சிதறடிக்கும். இவ்வளவு தடைகளையும் மீறி எடப்பாடி பழனிசாமி சாதித்து காட்டுவாரா என்பதை 2026 தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.
