பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 126 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக நடத்தும் வகையில் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.
அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி
- வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 16
- வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி: மார்ச் 23
- வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: மார்ச் 24
- வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி தேதி: மார்ச் 26
- வாக்குப்பதிவு தேத்: ஏப்ரல் 9
- வாக்கு எண்ணிக்கை: மே 4
காரசார விவாதம்! சிக்கலில் அட்மட்;அடித்து ஆடும் bjp
என்.டி.ஏ vs அசாம் சொன்மிலிடோ மோர்ச்சா
அசாம் மாநிலத்தில் இரண்டு முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அசாம் கன பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி, ரபா ஹாசங் ஜவுதா மஞ்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தற்போதைய நிலவரப்படி போடோலாந்து மக்கள் முன்னணிக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அசாம் சொன்மிலிடோ மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம், அசாம் ஜதியா பரிஷத், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் , அனைத்து ஹில் லீடர்ஸ் கான்பரன்ஸ் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 65 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதுதவிர அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ரைஜோர் தள், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், திரிணாமூல் காங்கிரஸ், சிபிஐ, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தனித்தனியே களம் காண்கின்றன. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, அசாம் மாநிலத்தில் 100 வயதை தாண்டியவர்கள் 2,586 பேர், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.04 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 2.04 லட்சம், முதல்முறை வாக்காளர்கள் 5.75 லட்சம், 20 முதல் 29 வயதுள்ள வாக்காளர்கள் 66.30 லட்சம், காவல்துறை, ராணுவம், தேர்தல் ஆணைய அதிகாரிகளாக இருக்கும் வாக்காளர்கள் 63,269 பேர் என்பது கவனிக்கத்தக்கது.
அசாம் 2021 தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. பாஜக 60, அசாம் கன பரிஷத் 9, யுபிபிஎல் 6 என வெற்றி பெற்றிருந்தன. மகோஜத் கூட்டணியில் காங்கிரஸ் 29, ஏஐயுடிஎஃப் 16, பிபிஎஃப் 4, சிபிஎம் 1 என வென்றிருந்தன. இதையடுத்து ஹிமந்த பிஸ்வ ஷர்மா முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து, 2016, 2021 என இரண்டு முறை பாஜக அசாமில் ஆட்சியை பிடித்தது கவனிக்கத்தக்கது.
