கேரளம் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கும் நடிகைகள்..!

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலத்தில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டுவென்டி-20 கட்சி சமீபத்தில் இணைந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் டுவென்டி-20 கட்சி தனித்து போட்டியிட்டதோடு, 8 தொகுதிகளில் களம் இறங்கியது. இந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. அந்த கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் டுவென்டி-20 கட்சி யின் 4-வது வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் சாபு ஜேக்கப் நேற்று கொச்சியில் வெளியிட்டார். அங்கமாலி, திருப்புனித்துரா. பெரும்பாவூர், ஏட் டுமானூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக் கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பெரும்பாவூர் சட்டமன்ற தொகுதியில் நடிகை லட்சுமி பிரியா போட்டியிடுகிறார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். திருப்புனித்துரா தொகுதியில் நடிகை அஞ்சலி நாயர் களம் இறங்குகிறார். அவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார்.

ஏட்டுமானூர் தொகுதியில் நடிகை வீணா நாயர் போட்டியிடுகிறார். இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடன கலைஞர் ஆவார். அங்கமாலி தொகுதியில் பிரோமி குரியாகோஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் வணிக மேலாண்மை ஆலோசகராக இருந்து வருகிறார்.

திருக்காக்கரா தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குனர் அகில் மாரர், திருவம்பாடி தொகுதியில் சன்னி தாமஸ், குன்னத்து நாடு தொகுதியில் பாபு திவாகரன், திருக்கரிப்பூர் தொகுதியில் ரவி குளங்கரா போட்டியிடுகின்றனர். டுவென்டி-20 கட்சி இதுவரை 12 தொகுதிகளுக்கு வேட்பாளர் களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link