இனி 18 நாட்களுக்குள் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்; மத்திய அரசு

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மூலம் முழுநீள திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க எடுக்கப்படும் சராசரி காலம், ஆன்லைன் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டதன் பின்னர் 18 வேலை நாட்களாக குறைந்துள்ளது தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் கீழ், செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது. இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்ற சட்டப்பூர்வ அம்சங்களை மீறும் வகையிலோ, அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் போன்றவை இடம் பெற்றாலோ மட்டுமே காட்சிகளை நீக்குவதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

திரைப்பட சென்சார் வழங்குவதற்கான கால அவகாசம் ஆன்லைன் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு 18 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திரைப்பட சட்டம் வகை செய்கிறது. இது போன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன” என்றார். இதற்கு முன்பு வரை தணிக்கை வழங்குவதற்கான கால அவகாசம் 48 நாட்கள் வரை இருந்த நிலையில் தற்போது 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறும்படங்களுக்கான கால அவகாசம் 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Source link