மகளிர் கிரிக்கெட் தரவரிசை – ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்

துபாய்,

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்களின் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா (790 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல் வார்ட் (782) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (749) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜெமிமா ரோட்ரிகஸ் 12-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் சோபி டிவைன் 7-ல் இருந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் அலனா கிங் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 10-வது இடத்தில் உள்ளார்.

Source link