நான் என்னுடைய வாழ்நாளில் திமுகவுக்கு ஓட்டளித்ததே கிடையாது என ஆட்டோ ஓட்டுநர் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
2026 திமுகவுக்கு ஓட்டு போட போறேன்
அதாவது ஆட்டோ ஓட்டுநர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, “என் வாழ்நாளில் நான் திமுகவிற்கு ஓட்டு போட்டதே கிடையாது. அது என்ன மேஜிக் தெரியலை இந்த 2026 நான் திமுகவுக்கு தான் ஓட்டு போட போறேன். அதுக்கான காரணத்தை ரொம்ப சிம்பிளாக சொல்லலாம். இதுக்கு முன்னாடி எடப்பாடியார் ஒரு நாலரை வருஷம் ஆட்சி பண்ணிட்டு இருந்தார். அப்போது அவர் செய்த சாதனைன்னு எதுவும் இல்லை. அதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆட்சியில் இருந்தப்ப சில திட்டங்களை கொண்டு வந்தாங்க.
ஆனால் இந்த ஐந்தாண்டு திமுக கொண்டு வந்த திட்டங்கள் சொல்றதுக்கு எவ்வளவு இருக்கு. அம்பேத்கர் அயலக கல்வி நிதின்னு ஒரு பெரிய திட்டம். இப்போ UPSC தேர்வில் பெரிய அளவுல நிறைய மாணவர்கள் பயன் அடைஞ்சு இருக்காங்க. எனக்கு பார்க்க பொறாமையா இருக்கு. நான் இருக்கும்போது எனக்கு மு.க. ஸ்டாலின் முதல்வரா இல்லையேன்னு. நான் முதல்வன், தமிழ் புதல்வன் திட்டங்கள் வாயிலாக ஏழை மாணவர்களுக்கு உதவி.
மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகை. அதை கூட உதவித்தொகைன்னு சொல்லாமல், சுயமரியாதையா உரிமைத்தொகைன்னு சொல்றாங்க. ஒவ்வொரு திட்டங்களுக்கும் வைத்துள்ள பெயரை பாருங்க. நான் முதல்வன் திட்டம், பயன் பெறுகிற மாணவர்களே முதல்வர். மகளிர் விடியல் பயணம், உங்களுக்கு விடியல் பிறந்திருச்சு. நீங்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி ஒரு பெயர். இப்படி திட்டங்களுக்கான எல்லா பெயரிலும் சுயமரியாதையை நீங்க பார்க்கலாம்.
புரட்சி வெடிக்கும்
இப்படி திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சத்தியமா இன்னும் 100 வருஷத்துக்கு இந்த திட்டங்களை கேன்சல் பண்ணவே முடியாது. அன்னைக்கு வரைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் முதல்வர். இது அண்ணா சொன்ன வார்த்தை. அதே தான் இன்னைக்கு இவருக்கும் பொருந்தும். அவரோட ஒரு திட்டத்தை கேன்சல் பண்ணாலும், மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்.
கூடுதல் தொகுதி நிலைப்பாட்டில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதி.. இரவுக்குள் திமுக எடுக்கப்போகும் முடிவு.. பரபரக்கும் அப்டேட்
பொருளாதார வளர்ச்சியில் இரண்டாமிடம்
இப்போ ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தராமல், மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்குறாங்க. ஆனால் தற்சார்பு பொருளாதாரம் மூலமாக இந்தியாவில் வளர்ச்சியில் இரண்டாவது இடத்துக்கு தமிழ்நாட்டு வந்துருக்கு. ஐந்து வருஷம் நடந்தது மேஜிக். இதுவரை திமுகவுக்கு ஓட்டு போட்டது கிடையாது. ஆனால் இந்த தடவை ஓட்டு போட போகிறேன்”. இவ்வாறு அந்த வீடியோவில் திமுக அரசை பாராட்டி தள்ளியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
இந்நிலையில் அவருடைய இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நமக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவது மட்டும் கிடையாது. வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்கு அளிப்பதற்கு தவறி விட்டோமே என்று எண்ணும் அளவிற்கான ஆட்சியை வழங்குவேன் என ஆட்சி பொறுப்பேற்றதும் சொல்லியிருந்தேன். அந்த சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்த காணொளியே சான்று!
நாம் ஓரணியில் ஒற்றுமையாக இருக்கும் வரை, இந்தச் சாதனை பயணம் தொடரும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோடும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
