திமுக கூட்டணியில் இ.கம்யூ-க்கு 5 தொகுதி;சோர்வடையச் செய்யும்.. இருந்தாலும்…- வீரபாண்டியன் பேச்சு! – dmk alliance icpi 5 seats sharing in tn assembly election 2026

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 5 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ,முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சு வார்த்தையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்ததை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டனர். அதன்படி, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை ஐந்து தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,அப்போது திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள திமுக வலியுறுத்தியது என்ற கேள்விக்கு? எப்போதும் உண்மையாகவும், அரசியலாக மட்டும் தான் பேசுவோம். நான்கு கட்ட பேச்சு வார்த்தையில் ஒருபோதும் திமுக நிர்பந்திக்கவில்லை. வேண்டுகோள் தான் விடுத்தார்கள்.
பல கட்சிகள் சேர்ந்து இருக்கிற காரணத்தினால், நீங்கள் இதை பரிசளிக்க வேண்டும் என்று முதல்வரே கேட்டிருந்தார். ஒருபோதும் திமுக தரப்பிலிருந்து கட்டளையிடும் தோனியில் பேசவில்லை. கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தான், இதுவரை எங்களிடம் பேசி இருக்கிறார்கள். நான்கு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த போது ஜனநாயக முறைப்படி சுயமரியாதையை எதிராக நடந்து கொண்டிருந்தால் அதிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகி சென்றிருக்கும்.
ஆனால் திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது சுயமரியாதைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ, கட்டளை இடம் வகையிலோ நடந்து கொள்ளவில்லை பேசவும் இல்லை என்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.நிர்வாகிகள் குழுவில் பேசப்பட்டது குறித்த கேள்விக்கு ? ஆலோசனைக் கூட்டத்தில் நடந் தத்தை வெளிப்படையாக பேச முடியாது. இன்றைய அரசியல் காலக் கட்டத்திற்கு நமக்கு வேண்டிய தொகுதிகளை பெறுவது கட்டாயமான ஒன்று. இல்லையென்றால், 6 தொகுதிகள் வரை வலியுறுத்தினோம். அதனை திமுக ஏற்றுக் கொண்டது.இது வெற்றிக் கூட்டணி கூறினார்.
தொடர்ந்து கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக இந்த முறை தொகுதிகள் குறைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு? நேற்று போல் இன்று இருக்காது. வெற்றி தோல்வியை வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை எடை போடக்கூடாது. நாடாளுமன்ற சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து எடை போடக்கூடாது. எங்களுடைய குரல் எப்பொழுதும் ஏழை,எளிய கொடுக்கப்பட்ட மக்களுக்காக கோரிக்கையில் அடங்கி இருக்கிறது. அதற்கான குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து,திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை காட்டிலும் காங்கிரசுக்கு அதிக தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு? இதற்கான பதிலை காலம் தான் பதில் சொல்லும். எங்களுடைய இலக்கு பாஜகவை வீழ்த்துவது. பாஜகவை அகற்றி இந்திய மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்று ஒரே இலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.