தமிழகத்தில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயரும் 60 சுங்கச்சாவடிகள் எவை?

சென்னை,

தமிழகத்தில் 6,600 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை பராமரிப்பதற்காக, பயன்படுத்தும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக, 2024-2025-ம் ஆண்டில் ரூ.4,300 கோடி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Also Read
உடல் எடையை குறைப்பதற்கான 3 மருந்துகளுக்கு ஒப்புதல் – மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
கோப்புப்படம்

நடப்பாண்டில் இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. குறைந்தது ரூ.10 முதல் கூடுதலாக ரூ.25 வரை கட்டணம் அதிகரிக்கும்.

Also Read
11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோப்புப்படம்

இனி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள, கட்டணம் உயரும் 60 சுங்கச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட வாரியாக பார்க்கலாம்.

திருப்பத்தூர் – வாணியம்பாடி.

செங்கல்பட்டு – பரனூர், கருங்குழி.

விழுப்புரம் – மொரட்டாண்டி, ஆத்தூர், கெங்கராம்பாளையம், சேலியமேடு, நங்கிளி கொண்டான், தென்னமாதேவி.

திருவள்ளூர் – நல்லூர், எஸ்.வி.புரம், பட்டரைபெரும்புதூர்.

காஞ்சீபுரம் – ஸ்ரீபெரும்புதூர்.

சென்னை – மாத்தூர், சூரப்பட்டு, வானகரம்.

திருவண்ணாமலை – சென்னசமுத்திரம், கரியமங்கலம், இனம்கரியாந்தல்.

அரியலூர் – மணகெதி.

கிருஷ்ணகிரி – நாகம்பட்டி, கரகத்தஹள்ளி, கிருஷ்ணகிரி, கதவணி.

கடலூர் – கொத்தட்டை, பொன்னலகரம்.

Also Read
உயர்கல்வித்துறையை சீரழித்து புதைகுழியில் தள்ளியதே திமுகவின் சாதனை – அன்புமணி கண்டனம்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி – கீழ்குப்பம்.

வேலூர் – வல்லம், பள்ளிகொண்டா.

திருப்பூர் – வேலம்பட்டி, பொங்கலூர்.

கோவை – மதுக்கரை, கணியூர்.

தர்மபுரி – புதுப்பட்டி

திருச்சி – வாழவந்தான்கோட்டை, கல்லக்குடி.

விருதுநகர் – எட்டூர்வட்டம்.

தூத்துக்குடி – சாலைபுதூர், புதூர்பாண்டியபுரம்.

புதுக்கோட்டை – பூதக்குடி, லெட்சுமணப்பட்டி, லெம்பாலக்குடி, பழைய கந்தர்வகோட்டை.

சிவகங்கை – கோடிகோட்டை, செண்பகம்பேட்டை, திருபாச்சேத்தி.

ராமநாதபுரம் – வெண்ணாத்தூர், போகலூர்.

திருநெல்வேலி – நான்குநேரி, வாகைக்குளம்.

கன்னியாகுமரி – திருப்பதிசாரம்.

தேனி – உப்பார்பட்டி.

திருவாரூர் – கோவில்வேணி.

தஞ்சாவூர் – வேம்புகுடி, மாணம்பாடி.

மதுரை – சிட்டம்பட்டி, எலியார்பத்தி, கப்பலூர்.

திண்டுக்கல் – சத்திரபட்டி, புதூர்.

Source link