தவெக சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு – 1000 பேர் மட்டுமே அனுமதி! – ramadan iftar event organized by tvk only thousand people allowed

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வில் அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.

TVK Chief Vijay(புகைப்படங்கள்Samayam Tamil)
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
வருகிற 18-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பங்கு பெற உள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகே உள்ளரங்க நிகழ்ச்சியாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெறுவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் அந்த பதிவில், வெறும் ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார் மேலும் அந்த ஆயிரம் பேருக்கும் அழைப்பிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் அந்த அழைப்புகளை பெற்று இருக்கிறவர்களை தவிர்த்து வேறு எவரும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட போவதில்லை என்பதையும் அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மேலும் அழைப்பிதழ் இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி நேரலையில் காணலாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த நிகழ்விற்கு தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது மேலும் அவருக்கு இருக்க கூடிய நட்சத்திரமுகம் அவருக்கு தேர்தலில் மிகப்பெரிய வாய்ப்புகளை தரும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர் தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை நான்கு முனை கூட்டணி இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம், இதில் தமிழக வெற்றி கழகத்திற்கு இதுவே முதல்முறை தேர்தல் என்பதால் அவர்கள் தேர்தலை அணுகும் விதம் அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
மேலும் கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்களும் அவரின் சொந்த வாழ்க்கை குறித்த பிரச்சினைகளும் நாளுக்கு நாள் பேசுபொருள் ஆகி வரக்கூடிய சூழலில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் தனக்கு வழங்கி வந்த தனது ஆதரவை முஸ்லிம் அமைப்புகள் திரும்ப பெற்றிருக்கின்றன. இந்த சூழலில் தான் விஜய் தலைமையில் நடக்கும் இந்த நோன்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
கிறிஸ்தவ சமூகத்தவரான விஜய்க்கு வட மாவட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கணிசமான அளவு வாக்குகளை பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் விஜய் ஏற்கனவே வேதாரண்யம் பகுதியில் போட்டியிடுவார் என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. ஆனால் சென்னையில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதாளும் அதே சமயத்தில் இளைஞர்கள் வாக்கு கணிசமான அளவில் திரளும் என்பதால் தற்போது அவர் பெரம்பலூரில் போட்டியிடலாம் என்றும் சொல்லப்படுகிறது ‌.
சிறுபான்மையினரின் வாக்குகளை அதிகமாக பெறும் கட்சியாக திமுக இருந்து வந்தது. திமுகவின் பாரம்பரியான வாக்குகள் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம் மக்கள்தான். ஆனால் அந்த வாக்குகள் தற்போது கணிசமான அளவு விஜய்க்கு செல்லும் என்கின்றனர் சிலர். இந்த சூழ்நிலையில் விஜய் நடத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது