தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பிப்பது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல முடியாத வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்கும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: 85 வயதுக்கு மேற்பட்டோர், 40%க்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவோர் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 5 நாட்களுக்குள், தகுதியான வாக்காளர்கள் படிவம் 12D-ஐ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின், அதிகாரிகள் நேரடியாக வாக்காளரின் வீட்டிற்குச் சென்று தபால் வாக்குச் சீட்டை வழங்கி, வாக்குப் பதிவு செய்ய உதவுவார்கள்.

உடல்நிலை அல்லது பார்வை குறைபாடு காரணமாக வாக்களிக்க இயலாதவர்கள், ரகசிய ஒப்புதலுடன் மற்றொருவரின் உதவியையும் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் தங்களது நிலையை உறுதிப்படுத்தும் அரசு சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Source link