ஜூனியர் பெண்கள் கிரிக்கெட்: தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ராஞ்சி,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான (ஜூனியர்) அகில இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்லிறுதி ஆட்டம் ஒன்றில் தமி ழக அணி, டெல்லியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய் தது.

இதன்படி முதலில் பேட் செய்த டெல்லி அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 288 ரன் கள் எடுத்தது. தனிஷா சிங் (92 ரன்), தீக்ஷா (64 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 289 ரன் இலக்கை நோக்கி தமி ழக அணி விளையாடிய போது. 38-வது ஓவரில் போதிய வெளிச்சம் இல் லாததால் சுமார் 30 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. நேரம் இழப்பீட்டை கணக்கில் கொண்டு, தமிழக அணிக்கு 44 ஓவர்களில் 253 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி 42.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Source link